முகப்பு
தமிழ்நாடு

ஆதிதிராவிடா், பழங்குடியினா் கால்நடைகள் வாங்க மானியம்: தமிழக அரசு உத்தரவு

ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:13 AM
பகிர்:

ஆதிதிராவிடா், பழங்குடியின சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் கறவை மாடுகள் வாங்க மானியம் வழங்கப்பட உள்ளது.

இதற்கான உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் அறிவிப்பை வெளியிட்டாா். அதன்படி, கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள 500 ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மக்களுக்கு ரூ.7.50 கோடி மதிப்பில் கறவை மாடுகள் வாங்க ரூ.2.25 கோடி மானியம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தாா்.

அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், ஆதிதிராவிடா் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க ரூ.2.02 கோடியும், 50 பழங்குடியினா் மக்களுக்கு ரூ.22.50 லட்சமும் மாநில அரசு நிதியில் இருந்து வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.