சேலத்தில் கனமழை: மழைநீரோடு கலந்த சாக்கடை நீரால் மக்கள் அவதி!
சேலத்தில் கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரோடு சாக்கடைக் கழிவு கலந்து ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாடுசேலத்தில் கனமழை: மழைநீரோடு கலந்த சாக்கடை நீரால் மக்கள் அவதி!
சேலத்தில் கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரோடு சாக்கடைக் கழிவு கலந்து ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சேலத்தில் கனமழை காரணமாக குடியிருப்புப் பகுதிகளில் மழைநீரோடு சாக்கடைக் கழிவு கலந்து ஆறாக ஓடுவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதனிடையே சேலம் மூக்கனேரி அருகே உள்ள சாக்கடை கால்வாய் நிரம்பி, கழிவுநீருடன், மழைநீர் கலந்து சாலையில் ஆறுபோல ஓடுவதால் குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக குமரன் நகர், லோகு நகர் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலைகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
இவ்வழியாக வாகனங்கள் செல்லும்பொழுது தடுமாறி கீழே விழும்நிலை ஏற்பட்டுள்ளது. மூக்கனேரிக்கு தண்ணீர் செல்லும் ஓடையை கடந்த சில ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் ஊருக்குள் புகுந்து விடுவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனிடையே சம்பந்தப்பட்ட பகுதிக்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டதையடுத்து சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல் சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தாழ்வான இடங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.