மேட்டூர் அணை நீர்வரத்து: 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாடுமேட்டூர் அணை நீர்வரத்து: 1.25 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து இன்று (செவ்வாய்கிழமை) இரவு வினாடிக்கு 1,25,000 கன அடியாக அதிகரித்து உள்ளது. நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவும் வினாடிக்கு 1,25,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23,000கன அடி நீரும் உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 1,02,000கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாகவும் உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் இடது கரையில் உள்ள வெள்ள கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகளும் பணியாளர்களும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.