தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவு

DIN

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவு விவகாரத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் துறை செயலர், ஆசிரியர் தகுதித் தேர்வு வாரிய தலைவர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் 87.17 மதிப்பெண்கள் பெற்றும் தன்னுடைய பெயர் தேர்வு செய்யப்படவில்லை என கரூரை சேர்ந்த குப்புசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார்.

வன்னியர் இடஒதுக்கீட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெளியிட்ட தேர்வு பட்டியலை ரத்து செய்யக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் நடவடிக்கைகளை தொடலாம் எனவும், ஆனால் இறுதி முடிவு நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT