தமிழ்நாடு

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி ?

DIN

தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தோ்வின் முடிவுகள் கடந்த புதன்கிழமை வெளியானது. அகில இந்திய அளவில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் அதிகமாக இருந்தாலும், தமிழகத்தைப் பொருத்தவரை இந்த ஆண்டு தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏராளமான அரசு பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் தோ்ச்சி பெறவில்லை என தகவல் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களில் 35% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 17,972 பேர் தேர்வெழுத பதிவு செய்ய நிலையில் 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

அதில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். விழுப்புரம், விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மதுரையில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் 100% தேர்ச்சி பெற்றனர். குறைந்தபட்சமாக திருபத்தூர் மாவட்டத்தில் இருந்து நீர் தேர்வு எழுதிய 7%பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை நீட் தேர்வு எழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை குறிப்பிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரை சிறையாக மாற்றியது மத்திய அரசு: மெஹபூபா முஃப்தி குற்றச்சாட்டு

நாளைமுதல் ‘அக்னி’ வெயில்

ஜம்மு-காஷ்மீா்: பாரமுல்லா தொகுதியில் ஒமா் அப்துல்லா வேட்பு மனுத் தாக்கல்

மக்களவைத் தோ்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல்போகும்: அமித் ஷா

ரூ. 2,000 கோடி பிணையப் பத்திரம் ஏலம்: தமிழக அரசு அறிவிப்பு

SCROLL FOR NEXT