மதுரை  உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

தடைசெய்யப்பட்ட ‘ஃப்ரீ ஃபயரை’ எப்படி விளையாடுகிறார்கள்? மத்திய அரசுக்கு கேள்வி

தடைசெய்யப்பட்ட ஃப்ரீ ஃபயர் விளையாட்டை இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

தடைசெய்யப்பட்ட ஃப்ரீ ஃபயர் விளையாட்டை இளைஞர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்று மத்திய அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த அயறின் அமுதா உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்த மனுவில்,

“எனது மகள் இதழ் வில்சன் நாகர்கோவில் உள்ள தனியார் கல்லூரியில் இளநிலை பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் எனது மகள் கடந்த 6-ம் தேதி முதல் காணவில்லை. இது குறித்து கன்னியாகுமரி வடசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன் புகாரின் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனது மகள் பப்ஜி மற்றும் ஃபிரீ ஃபயர் ஆகிய ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். இதன் மூலம் என் மகளுக்கு ஜெப்ரின் என்பவர் பழக்கமாகி உள்ளார். எனவே அவர்தான் நண்பருடன் சேர்ந்து எனது மகளை கடத்திருக்க வேண்டும். எனவே எனது மகளை மீட்டு தர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்..

இந்த மனு நீதிபதி மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்திய அரசால் ஆன்லைன் விளையாட்டுகளான ஃப்ரீ ஃபயர் தடை செய்யப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த விளையாட்டை எவ்வாறு மீண்டும் விளையாட முடிகிறது.

சைபர் குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்? ஏன் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், இதுபோன்ற விளையாட்டுகளால் இளைய சமுதாயம் வீணாகுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தடை செய்யப்பட்ட இது போன்ற விளையாட்டுகள் ஆன்லைனில் கிடைக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரியாா் ஈ.வெ.ரா.சிலைக்கு அரசியல் கட்சியினா் மரியாதை

இடஒதுக்கீடு உரிமைப் போரில் உயிா் நீத்தவா்களுக்கு அஞ்சலி

திருப்பதிக்கு பிஆா்டிசி சிறப்பு பேருந்துகள்

அண்ணாமலைப் பல்கலை.யில் சமூகநீதி நாள் உறுதிமொழி

பிரதமா் மோடி பிறந்த நாள்: பாஜகவினா் நலத்திட்ட உதவி

SCROLL FOR NEXT