கொலையுண்ட விருமாண்டி. 
தமிழ்நாடு

சொத்துப் பிரச்னை: தம்பியை கொடூரமாக வெட்டிக் கொன்ற சகோதரர்கள்!

சொத்து பிரச்னை காரணமாக தம்பியை கத்தியால் வெட்டிக் கொன்ற அண்ணன் மற்றும் தம்பியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

DIN

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொத்து பிரச்னை காரணமாக தம்பியை கத்தியால் வெட்டிக் கொன்ற அண்ணன் மற்றும் தம்பியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

திருமங்கலம் அருகே செக்காணுரணி பாண்டியன் லைன் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் விருமாண்டி(30). இவருடைய மனைவி விஜயா. விருமாண்டி திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். வாரம் ஒரு முறை வீட்டிற்கு வருவார். இவருடைய அண்ணன் கார்த்திக் ராஜா தம்பிகள்,  ஐகோர்ட் ராஜா மற்றும் காசி ராஜா ஆகியோர் உள்ளனர். 

இந்நிலையில் விருமாண்டிக்கும் கார்த்திக் ராஜா, ஐகோர்ட்ராஜா சொத்து பிரச்னை  சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணியளவில் குடும்பப் பிரச்னை பற்றி பேசுவதற்காக விருமாண்டி மற்றும் விஜயாவை கார்த்திக் ராஜா ஐகோர்ட்ராஜா அழைத்துள்ளனர்.

இதனால் அவர்களது சொந்த ஊரான கரிசல்பட்டியில் உள்ள வீட்டு முன்பு சென்ற போது அங்கிருந்த விருமாண்டி அம்மா தங்கமாளை பார்த்து எல்லாத்திற்கும் காரணம் நீதானே என விருமாண்டி திட்டி உள்ளார். 

இதனால் கார்த்திக் ராஜா மற்றும் ஐகோர்ட் ராஜா நண்பர் காளப்பன்பட்டியைச் சேர்ந்த சரத்குமார் மூன்று பேரும் சேர்ந்து சரமாரியாக விருமாண்டியை கத்தியால் வெட்டி உள்ளனர். மேலும் அம்மா தங்கம்மாள் தடுத்துள்ளார். 

இந்நிலையில் கடைசி தம்பி காசிராஜா அருகில் இருப்பவர்கள் அங்கு வரவே மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் தொடர்பாக செக்காணுரணி காவல் துறையினருக்கு  தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் செக்காணுரணி காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விருமாண்டி மனைவி விஜயா செக்காணுரணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கார்த்திக் ராஜா, ஐகோர்ட்ராஜா, சரத்குமார் மூன்று பேரையும் காவல் துறையினர்  கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT