அண்ணா யாருக்கு சொந்தம்? மணப்பாறையில் திமுக-அதிமுக மோதல்
மணப்பாறையில் முன்னாள் முதல்வர் அண்ணா எந்தக் கட்சிக்கு சொந்தம் என அதிமுக, திமுகவினர் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மணப்பாறையில் முன்னாள் முதல்வர் அண்ணா எந்தக் கட்சிக்கு சொந்தம் என அதிமுக, திமுகவினர் மோதிக் கொண்டதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பேருந்து நிலையம் அருகே அறிஞர் அண்ணா சிலை உள்ளது. திராவிட கட்சிகளில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்துவது வழக்கம்.
வழக்கம்போல், நிகழாண்டு அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு திராவிட கட்சியினர் ஊர்வலகத்திற்கு, மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது.
Advertisement
Advertisement
இதில் அண்ணா சிலை உள்ள பகுதியில் திமுகவினர் கட்சி கொடிகளை அமைத்தும், சாமியானா பந்தல் அமைத்தும் இருந்தனர். இதனையடுத்து அங்கு வந்த அதிமுகவினர் தங்களது கட்சி கொடியினையும், இரட்டை இலை சின்னங்களையும் சிலைக்கு அருகில் அமைத்ததால் இருத்தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அண்ணா யாருக்கு சொந்தம் என்பதில் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்படும் நிலையில், நிகழ்விடத்துக்கு சென்ற காவல் ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார், இருவரையுமே சமரசம் செய்தனர்.
பிறந்தநாள் ஊர்வலம் நடப்பதற்கு முன்னதாகவே அண்ணா யாருக்கு சொந்தம் என்பதில் திமுக - அதிமுக கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.