தமிழ்நாடு

அண்ணா பிறந்த நாள்: கூத்தாநல்லூரில் திமுக, அதிமுகவினர் மாலையணிவித்து மரியாதை

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அண்ணா சிலைக்கு வியாழக்கிழமை மாலையணிவிக்கப்பட்டது. இதேபோன்று அதிமுக சார்பிலும் மாலையணிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அரசியல் கட்சிகள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அண்ணாவின் உருவப் படத்திற்கு மாலையணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, அண்ணாவின் வாழ்க்கை வரலாறு குறித்தும் விவரிக்கப்பட்டன. 

இந்நிலையில், கூத்தாநல்லூர் நகர திமுக சார்பில், நகரச் செயலாளர் எஸ்.வி. பக்கிரிசாமி தலைமையில், அண்ணா பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. திமுக அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா உருவப் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்கினர். 

தொடர்ந்து, ஊர்வலமாகச் சென்று, புதுப்பாலத்தில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.

நிகழ்ச்சியில், நகர மன்றத் தலைவர் மு.பாத்திமா பஷீரா, அவைத் தலைவர் யு.முத்துக்குரு சுவாமி, நகர துணைச் செயலாளர்கள் ஜி.சேகர், எஸ்.எம்.கே.யாஸ்மின் பர்வின், நகரப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாஜா நஜ்முதீன், மாவட்டப் பிரதிநிதிகள் கு.ரவிச்சந்திரன், ஏ.ஏ.அமீர்தீன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூத்தாநல்லூர் நகர அதிமுகவினர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.

இதேபோல், கூத்தாநல்லூர் நகர அதிமுக சார்பில், அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாலையணிவிப்பு நிகழ்வு நடைபெற்றது. லெட்சுமாங்குடி பாலத்தருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலையணிவிப்பு நிகழ்வுக்கு,நகரச் செயலாளர் ஆர்.ராஜசேகரன் தலைமை வகித்தார். முன்னாள் துணைச் செயலாளர் உதயகுமார், நகரப் பொருளாளர் ஜெ.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

.நிகழ்ச்சியில், நகர துணைச் செயலாளர் கொய்யா என்ற மீரா மைதீன், நகர மாணவரணி செயலாளர் அ.சொற்கோ, அம்மா பேரவை துணைத் தலைவர் எஸ்.பி. காளிதாஸ், இளைஞர், இளம் பெண்கள் பாசறை நகரச் செயலாளர் வி.எஸ்.நெடுமாறன், நகர மன்ற உறுப்பின்ற ம.முருகேசன் உள்ளிட்ட பலர் அண்ணா சிலைக்கு மாலையணிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT