தமிழகத்தில் பள்ளிக் காலாண்டு தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித் துறை 
தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிக் காலாண்டு தேர்வு எப்போது? பள்ளிக் கல்வித் துறை

தமிழகத்தில் காலாண்டு தேர்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ, மாணவிகள் இருக்கும் நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

DIN

சென்னை: தமிழகத்தில் காலாண்டு தேர்வு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ, மாணவிகள் இருக்கும் நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பள்ளி அளவில் தேர்வு தாள்களைத் தயாரித்து காலாண்டு தேர்வுகளை நடத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்களைத் தயாரித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் வினாத்தாள் அனுப்பும் முறையில், வினாத்தாள்கள் கசியும் நிகழ்வுகள் நேரிட்டதால் பள்ளிக் கல்வித் துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அதுபோல, காலாண்டு தேர்வு தேதிகளை, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் செப்டம்பர் இறுதிக்குள் காலாண்டு தேர்வுகளை நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடிபோதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பாளையங்கோட்டையில் பரபரப்பு!

ரஷியாவிடமிருந்து இனி இந்தியா கச்சா எண்ணெய் வாங்கப்போவதில்லையாம்: டிரம்ப் தகவல்

வெண்ணிலவே... ரேஷ்மா பசுபுலேட்டி!

ரெட் ரோஸ்... சாக்‌ஷி அகர்வால்!

இனி நோயாளிகள் இல்லை, மருத்துவப் பயனாளிகள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT