விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ்.  
தமிழ்நாடு

பெரியார் சிலைக்கு ராமதாஸ் மரியாதை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரியாரின் 144 ஆவது பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் சங்கக் கொடியை ஏற்றி வைத்த ராமதாஸ்.

மேலும் சட்டமேதை அம்பேத்கர், காரல் மார்க்ஸ் ஆகியோரின் சிலைகளுக்கும் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பாமக சிறப்பு தலைவர் ஜி‌.கே.மணி, மாநில துணைத் தலைவர் என்.எம்.கருணாநிதி, மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர்களின் உருவப் படங்களுக்கு ராமதாஸ் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிகளில் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

SCROLL FOR NEXT