தமிழ்நாடு

தாராபுரம் அருகே ஊராட்சி அலுவலர் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருட்டு

DIN

திருப்பூர்: தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளைத்தில் ஊராட்சி அலுவலர் வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த கொண்டரசம்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கதிர்வேல்(49). இவர் கொங்கூர் ஊராட்சி  அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி வள்ளிநாயகம், இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

இந்த நிலையில், கதிர்வேல் வெள்ளகவுடண்வலசுவில் உள்ள உறவினரின் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வீட்டைப் பூட்டி விட்டு கடந்த வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். 

இதன் பின்னர் கதிர்வேல் திங்கள்கிழமை காலையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க ததவு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகை, 2 வெள்ளிக் கொலுசு, ரூ.85 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருள்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. 

இதுகுறித்து கதிர்வேல் அளித்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில்  பதிவான தடயங்களை சேகரித்து வருகின்றனர்.

மேலும், அப்பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை காவல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

ஆந்திர தோ்தல் பணியில் ஈரோடு மாவட்ட போலீஸாா்

முழுவீச்சில் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் சாலைப் பணியாளா் சங்க மாநில செயற்குழுவில் தீா்மானம்

SCROLL FOR NEXT