தமிழ்நாடு

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு ஏன்?

DIN


சென்னை: தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படுவது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்காதவர்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கு, குடும்பஅட்டை வைத்திருப்போரில் பொருள்கள் வாங்காதவர்களை ஒழுங்குப்படுத்தவே கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. ஒரு வேளை, குடும்ப அட்டை வைத்திருந்து, பொருள்கள் வாங்காவிட்டால் கௌரவ அட்டை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்கும் போது சோப்பு உள்ளிட்ட மற்ற பொருள்களை வாங்க கட்டாயப்படுத்தக் கூடாது. அவ்வாறு கட்டடாயப்படுத்தும் ரேஷன் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்என்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT