தமிழ்நாடு

பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க 'தமிழ்நிலம்' இணையதளம்: முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்

எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வகையில் 'தமிழ்நிலம்' என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

DIN

எங்கிருந்தும், எந்நேரமும் இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வகையில் 'தமிழ்நிலம்' என்ற இணையதளத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கிவைத்தார். 

இதன்படி பட்டா மாறுதலுக்கு வட்டாட்சியர் அலுவலகம் அல்லது இ-சேவை மையத்திற்கு செல்ல வேண்டியதில்ல்லை. முன்னதாக நிலம் எங்கிருக்கிறதோ அங்குள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்றுதான் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வந்தது. 

எங்கிருந்தும், எந்நேரமும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். விடுமுறை நாள்களிலும் விண்ணப்பிக்கலாம். 

பட்டா மாறுதலுக்கான உட்பிரிவு, செயலாக்கக் கட்டணங்களை இணைய வழியிலேயே செலுத்தவும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. 

கட்டணம் செலுத்தப்பட்டதும் நில அளவர் அல்லது கிராம நிர்வாக அலுவலரின் நடவடிக்கைகக்கு விண்ணப்பங்கள் பட்டியலிடப்படும். பட்டா மாறுதல் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் உத்தரவின் நகல், பட்டா உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் இணையத்திலேயே கட்டணமின்றி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

பயணிக்கு உடல்நலக் குறைவு: ஜெய்ப்பூருக்கு திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானம்

”காங்கிரஸ் செய்த துரோகம்! பராசக்தி படக்குழுவுக்கு வாழ்த்துகள்” அண்ணாமலை பேட்டி

அடுத்த 2 மணி நேரத்துக்கு 6 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT