தமிழ்நாடு

பாஜகவினரின் வீடுகளில் தொடரும் தாக்குதல்: ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழகத்தில் பாஜகவினரின் வீடுகளில் தொடர்ந்து 2- ஆவது நாளாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகிறார். பல்வேறு பகுதிகளில் பாஜகவினரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

DIN

தமிழகத்தில் பாஜகவினரின் வீடுகளில் தொடர்ந்து 2- ஆவது நாளாக மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி வருகிறார். பல்வேறு பகுதிகளில் பாஜகவினரின் வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன. 

நேற்று கோவை பாஜக அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இதுகுறித்து விசாரிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் இன்று, சென்னை தாம்பரம் அருகே சிட்லபாக்கம் ராஜராஜேஸ்வரி நகரில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தலைவர் சீதாராமன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

மர்ம நபர்கள் இருவர் வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றுள்ளனர். சிட்லபாக்கம் காவல் துறையினர் அவர்களைத் தேடி

அதுபோல, திண்டுக்கல் மாவட்டம் குடைபாறைப்பட்டியில் பாஜக மேற்கு நகர தலைவர் செந்தில் பால்ராஜின் கார் செட்டுக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். 

ஈரோடு சத்தியமங்கலம் அருகே புஞ்சைப் புளியம்பட்டியில் பாஜக பிரமுகர் சிவசேகரின் காரை மர்ம நபர் தீ வைத்து எரித்துள்ளனர். 

இதுபோல ராமநாதபுரம் திண்டுக்களிலும் பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பாஜக நிர்வாகிகளின் வீடு மற்றும் வாகனங்களின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாதக் கொள்கையின் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜாதிய எண்ணத்தை வெளிப்படுத்தும் ஆசிரியா்களை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

இந்திய-சீன நட்புறவு ‘ஆசியான்’ நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூா் அமைச்சா் கருத்து

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட காஞ்சிபுரம் டிஎஸ்பி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

38 கோடி டன்னாகச் சரிந்த நிலக்கரி உற்பத்தி

SCROLL FOR NEXT