முகப்பு
தமிழ்நாடு

தங்கம் ஒரு சவரன் ரூ.40,760-க்கு விற்பனை! 

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 40,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

Updated On : 29 டிசம்பர், 2022 at 11:47 AM
ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அலுவலர் வீட்டிலேயே இப்படி ஒரு திருட்டா?
பகிர்:

சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 40,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வாரத்தில் அதிகபட்சமாக டிச.14ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.40,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கம் கண்டுவருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. 

அந்தவகையில். வாரத்தின் நான்காம் நாளான இன்று(டிச.28) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,095 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன்மூலம் சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.40,760 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

அதேசமயம், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.60 காசுகள் குறைநது ரூ.74.00 ஆகவும், ஒரு கிலோவுக்கு ரூ.600  குறைந்து ரூ.74,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.