முகப்பு
தமிழ்நாடு

ஷேன் வார்னே மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

Updated On : 4 மார்ச் 2022, 8:54 pm IST
பகிர்:

ஆஸ்திரேலிய சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 
கிரிக்கெட் உலகின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே(52) மாரடைப்புக் காரணமாக தாய்லாந்தில் இன்று காலமானார். ஆஸி.அணிக்காக 15 ஆண்டுகள் விளையாடிய வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்களைக் கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் ஆவார். 

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வலம் வந்த வார்னேவின் திடீர் மறைவு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், தனது ட்விட்டர் பதிவில், ஷேன் வார்னேவின் திடீர் மரணம் குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். 
உண்மையான மேதையை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் மற்றும் கிரிக்கெட் உறவுகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.