கலப்புத் திருமணம்: மகனை வெட்டிக் கொலை செய்த தந்தை! மருமகள் கவலைக்கிடம்
கிருஷ்ணகிரியில் வேறு சாதி பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட மகனை தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் வேறு சாதி பெண்ணுடன் திருமணம் செய்து கொண்ட மகனை தந்தையே வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மகன் சுபாஷ், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் 3 மாதங்களுக்கு முன்னதாக சுபாஷ், வேறு ஒரு சமூகத்தைச் சேர்ந்த அனுஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுபாஷ் தனது மனைவியுடன் சொந்த ஊரான அருணபதி கிராமத்திற்கு பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
Advertisement
Advertisement
ஏற்கனவே அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தண்டபாணி, பாட்டி வீட்டிற்கு வந்து, மகன் சுபாஷ், மருமகள் அனுஷா மற்றும் தாய் கண்ணம்மா ஆகியோரை சரமாரியாக வெட்டினார்.
இதில், சுபாஷ், கண்ணம்மா இருவரும் உயிரிழந்தனர். அனுஷா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.