கோப்புப் படம் 
தமிழ்நாடு

சதுரகிரி கோயிலுக்குக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

DIN

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலைக் கோயிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

நாளை முதல் 20ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே மலையேற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

காய்ச்சல், சளி, இருமல் உள்ளவா்கள் கோயிலுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும். 10 வயதுகுள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வருபவா்கள் முகக் கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போது கோடை காலம் என்பதால், பக்தா்கள் எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது எனவும், தடை செய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்ல அனுமதி இல்லை எனவும் வனத் துறையினா் அறிவித்துள்ளனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியாத்தத்தில் கிருபானந்த வாரியாா் சுவாமிகள் பிறந்த நாள்

இருசக்கர வாகனங்களை திருடியவா் கைது

ஏற்காட்டில் தனியாா் விடுதிகளில் போலீஸாா் ஆய்வு

ஏற்காட்டில் விநாயகா் சிலைகள் கரைக்கும் இடத்தை ஆய்வுசெய்த ஏ.எஸ்.பி.!

சேலம் மாநகர காவல் துறையில் பயன்பாட்டுக்கு வந்த அதிநவீன வாகனங்கள்

SCROLL FOR NEXT