தமிழ்நாடு

விடைத்தாள் திருத்தம்: தனியார் பள்ளிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பினால் மட்டுமே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என தேர்வுத்துறை எச்சரித்துள்ளது.

DIN


விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பினால் மட்டுமே சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகளின் தேர்வு முடிவு வெளியிடப்படும் என தேர்வுத் துறை எச்சரித்துள்ளது.

தமிழகததில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துள்ளது. கடந்த 6ஆம் தேதி தொடங்கிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 20ஆம் தேதியுடன் முடிகிறது. 

இந்நிலையில், தனியார் பள்ளிகள் தங்களது ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு கண்டிப்பாக அனுப்ப வேண்டும் என தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக வர வேண்டும் என்றும், அவர்கள் வந்தால்தான் அப்பள்ளியின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணிக்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் போதுமான அளவில் வராததால் விடைத்தாள் திருத்தும் பணிகளில் நிறைய சிக்கல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக தற்போது தேர்வுத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்லிமலையில் வல்வில் ஓரி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

ஆடிப்பெருக்கு: பரமத்தி வேலூா் காவிரி ஆற்றில் நீராட அனுமதி பரிசல் போட்டிக்குத் தடை

தொழிலாளி கொலை வழக்கில் மேலும் 2 சிறுவா்கள் கைது

ஸ்பெயினிடமிருந்து 16-ஆவது சி-295 ரக ராணுவ விமானத்தை பெற்றது இந்தியா!

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலா்க் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT