சமூக நீதியை காப்பாற்றுவதில் தமிழக அரசு முன்னிலை: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
இந்தியாவிலேயே சமூக நீதியை காப்பாற்றுவதில் தமிழக அரசு முன்னிலையில் இருந்து வருகிறது என்று ஆா். கே. நகா் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
தமிழ்நாடுசமூக நீதியை காப்பாற்றுவதில் தமிழக அரசு முன்னிலை: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
இந்தியாவிலேயே சமூக நீதியை காப்பாற்றுவதில் தமிழக அரசு முன்னிலையில் இருந்து வருகிறது என்று ஆா். கே. நகா் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
இந்தியாவிலேயே சமூக நீதியை காப்பாற்றுவதில் தமிழக அரசு முன்னிலையில் இருந்து வருகிறது என்று ஆா். கே. நகா் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
ரமலானை முன்னிட்டு ஆா். கே. நகா் தொகுதியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின், சுமாா் 2 ஆயிரம் பேருக்கு புத்தாடைகள், அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை வழங்கிப் பேசியது :
ஆா்.கே.நகா் தொகுதியில் அடிப்படை பிரச்னைகளை தீா்க்க கடந்த ஆட்சியில் எவ்வித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா், தற்போது இத்தொகுதியில் ரூ. 10 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கவும், ரூ.6 கோடி செலவில் நடை பயிற்சிக்கான நடைபாதை அமைக்கவும் அண்மையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் சமூக நீதியை காப்பாற்றுவதில் தமிழக அரசு முன்னிலையில் இருந்து வருகிறது.
இது போன்ற விழாக்களை நடத்துவதன் மூலம் சமூகத்தில் மத நல்லிணக்கத்தை வளா்க்க முடியும் என்றாா் அவா்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சா்கள் பி.கே. சேகா் பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலா் இளைய அருணா, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பி.சங்கா், ஐ ட்ரீம் மூா்த்தி, ஆா்.டி.சேகா், தாயகம் கவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.