முகப்பு
தமிழ்நாடு

ராணிப்பேட்டை: அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து 4 மாணவர்கள் தப்பியோட்டம்

ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பியோடிய 4 மாணவர்களை போலீஸார் தீவிரமாக  தேடிவருகின்றனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:51 PM
கோப்புப் படம்.
பகிர்:

ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பியோடிய 4 மாணவர்களை போலீஸார் தீவிரமாக  தேடிவருகின்றனர்.

தமிழக அரசின் சமூக நலத்துறை சார்பில் ஆதரவற்ற மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கும் நோக்கில் அரசினர் குழந்தைகள் பாதுகாகப்பு இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. அதில் வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை காரை கூட்டு சாலையில் அரசினர் குழந்தைகள் இல்லம் சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் 1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மாவட்ட சிறப்பு இல்லத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்ட 5 வயதுக்கும் மேற்பட்ட ஆண் சிறாரர்கள் இந்த இல்ல்திதல் தங்க வைக்கப்பட்டு உணவு உறைவிடம் அளித்து 12 ம் வகுப்பு படிக்கும் வரை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி அவரவர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுவர்கள்.

இந்த இல்லத்தில் மொத்தம் 150 க்கும் மேறஅபட்ட மாணவர்கள் 5 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இந்த இல்லம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு (நன்னடத்தை) அலுவலர் கண்காணிப்பில், ஒரு கண்காணிப்பாளர், இல்ல தலைமை மருத்தவர், மேலாளர், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் உதவியாளர்கள், சமையலர்கள், இரவுக்காவலர்கள் என மொத்தம் 54 நான்கு பேர் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டையில் உள்ள  சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து 4 மாணவர்கள் சனிக்கிழமை அதிகாலை தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை ராணிப்பேட்டை போலீஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ாண்டு ஜூன் மாதம் ராணிப்பேட்டை மாவட்ட அரசு விழாவிற்கு செல்லும் வழியில் காரை கூட்டுச் சாலையில் செயல்பட்டுவரும் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், இல்லத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் ஆசிரியர்களிடம் அம்மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →