அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலக புத்தக நாளையொட்டி சுட்டுரையில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், நல்ல புத்தகங்கள் நல்ல தோழன். ஒரு புத்தகத்தை நாம் படிக்கத் தொடங்கும்போது, அது நம்முடன் உரையாடத் தொடங்குகிறது. நாம் அறியாத உலகத்தைக் காட்டுகிறது. அறிவூட்டுகிறது! நம்மை பண்படுத்துகிறது!
அதனால்தான், புத்தகங்களைப் பரிமாறிக்கொள்வைதை ஓர் இயக்கமாகத் தி.மு.க.வினர் முன்னெடுக்கிறோம்.
புத்தக வாசிப்பைப் பரவலாக்கும் வகையில், திராவிட அரசு மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சிகளை நடத்துவதுடன், நூலகங்களுக்கும் புத்துயிர் அளித்துள்ளது. அறிவுப் புரட்சிக்கு புத்தகங்களே ஆயுதம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.