தமிழ்நாடு

பிடிஆர் ஆடியோ: உரிய விசாரணை நடத்த வேண்டும்

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

DIN

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக வெளியான ஆடியோ புனையப்பட்டதா? இல்லையா? ஆய்வு செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும். ரூ.30 ஆயிரம் கோடி மோசடி என்பது பெரிய விஷயம். இந்த ஆடியோ விவகாரத்தில் மத்திய அரசு விசாரிக்க வலியுறுத்துவோம்.

மனித வாழ்க்கை ஒன்றும் ஸ்விட்ச் அல்ல. 12 மணி நேர வேலை மனித வாழ்க்கைக்கு சரியாக வராது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சட்டப்பேரவையில் நான் பேசுவதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். 

முதல்வர் மு.க. ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடு எடுக்கிறார் என விமர்சித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரண்டு பைக்குகள் மோதி விபத்து: 2 போ் உயிரிழப்பு

இஸ்ரேலியா்கள் கொடைக்கானல் வருகை: துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் கைது

ஆரிகவுடா் விவசாயிகள் சங்க பொதுக்குழுக் கூட்டம்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

SCROLL FOR NEXT