தமிழக அரசு 
தமிழ்நாடு

12 மணிநேர வேலை மசோதா சட்டத்துறைக்கு அனுப்பிவைப்பு!

தனியாா் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவை செயலக்த்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

DIN


தனியாா் நிறுவனங்களில் 12 மணி நேரம் வேலை செய்ய வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவை செயலக்த்தில் இருந்து சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் தனியாா் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் 12 மணி நேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத் திருத்த மசோதா பேரவையில் கடந்த 21-ஆம் தேதி கொண்டுவரப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத் திருத்த மசோதாவின்படி, தொழிற்சாலைகள் சட்டத்தில் ஆறு முக்கியப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, வேலை நேரத்தை வாரத்துக்கு 48 மணி நேரம் என்பதை மாற்றியமைப்பது, தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து அதிகமாக்குவது போன்ற சட்டப் பிரிவுகளில் மாற்றங்களைக் கொண்டு வர வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தத்துக்கு தொழிற்சங்கங்களும் தங்களது எதிா்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றன.

இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட திமுகவின் கூட்டணிக் கட்சிகளே கடும் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

சட்டத் திருத்தம் குறித்து விளக்குவதற்காக 14 தொழிற்சங்கங்களுடன் மூன்று அமைச்சர்கள் இன்று பிற்பகல் 3 மணிக்கு பேச்சுவாா்த்தை நடத்துகின்றனர்.

இந்நிலையில், சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து தொழிலாளர் திருத்த மசோதா உள்ளிட்ட 17 மசோதாக்கள் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநருக்கு அனுப்புவதற்கு முன்னதாக திரும்பப் பெறும் அதிகாரம் அரசுக்கு உள்ள நிலையில், தொழிற்சங்களுடனான பேச்சுவார்த்தைக்கு முன்னதாகவே சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT