தமிழ்நாடு

சிதம்பரம் நீதிமன்ற வாயிலில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

சிதம்பரம் நீதிமன்ற வாயிலில்  தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வலியுறுத்தி வழக்குரைஞர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி எதிரே உள்ள சிதம்பரம் நீதிமன்ற வாயிலில் அகில இந்திய வழக்குரைஞர் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வழக்கறிஞர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆழ்வார் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் கௌதமன், வைத்தியலிங்கம், செல்வகுமார், பெர்னாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வழக்குரைஞர்கள் தயாநிதி, செந்தில், மணிவண்ணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள். 

இதில் வழக்குரைஞர்கள் ராஜவேல், பாலகுரு, சங்கர், அருண்குமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழியை நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT