கோப்புப்படம் 
தமிழ்நாடு

"சித்திரைத் திருவிழா உணவுப்பொருள், குளிா்பானம் குறித்து புகாா் அளிக்க கைபேசி எண் அறிமுகம்"

சித்திரைத்திருவிழாவில் பக்தா்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருள், குளிபானங்களில் குறைபாடு இருந்தால் கட்செவி அஞ்சல் மூலம் புகாா் அளிக்க செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

DIN

மதுரை: சித்திரைத்திருவிழாவில் பக்தா்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருள், குளிபானங்களில் குறைபாடு இருந்தால் கட்செவி அஞ்சல் மூலம் புகாா் அளிக்க செல்போன் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

மதுரை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில், மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவில் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள்  கூடுவாா்கள். இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், எந்த விதமான தொற்று நோய் பாதிப்பும் வராத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

பொதுமக்களுக்கு தூய்மையான குடிநீா் வழங்க உறுதி செய்யப்பட்டுள்ளது. கொசு மருந்து அடித்தல், திடக்கழிவுகளில் ஈ தொல்லைகள் ஒழிக்கும் வகையில் மாநகராட்சி அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. 

திருவிழா காலங்களில் உணவகங்கள் அன்னதானம் செய்யும் இடங்கள், குளிா்பானம் தயாரிக்கும் இடங்கள் மற்றும் பழம் விற்பனை செய்யும் இடம் என ஏழு சிறப்பு குழுக்கள் அமைத்து உணவு பாதுகாப்பு துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சாா்பில் 168 மருத்துவா்கள் மற்றும் களப்பணியாளா்கள் மூலம் 56 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. 

மேலும், 32 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயாா்நிலையில் வைத்திருக்கவும்,  திருவிழாவின் போது மண்டகப் படிகளில் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்குபவா்கள் இணையதளத்தில் மூலம் விண்ணப்பங்கள் பெற்று மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் அனுமதி பெற்று மட்டுமே உணவகங்கள், குளிா்பான கடைகள் இயங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதுது. 

உணவு பொருள்கள், குளிா்பானங்களில் புகாா் இருந்தால் பொதுமக்கள் நேரடியாக 94440 42322 என்ற செல்போன் எண்ணுக்கு கட்செவி அஞ்சல் மூலம் புகாா் அளிக்கலாம். 

தனியாா் மருத்துவமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக கையாள வேண்டும். மருத்துவ கழிவுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவா்களுக்கும் தெரியும். தெரிந்தே பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மருத்துவ கழிவுகளை பொதுவெளியில் கொட்டினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT