கோப்புப்படம் 
தமிழ்நாடு

தாம்பரம் - வேளாங்கண்ணி செப்.5 -இல் சிறப்பு ரயில்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப். 5 -ஆம் தேதி இயக்கப்படுகிறது.

DIN

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா தேவாலய திருவிழாவை முன்னிட்டு தாம்பரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில் செப். 5 -ஆம் தேதி இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தாம்பரத்திலிருந்து செப்.5 -ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06031) மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06032) வேளாங்கண்ணியிலிருந்து செப்.6 -ஆம் தேதி காலை 8 .50 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் தாம்பரத்திலிருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு புதன்கிழமை (ஆக.2) முதல் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெல்ல முடியாது... ரஜிஷா விஜயன்!

முதல்வர் ஸ்டாலினுடன் காங்கிரஸ் ஐவர் குழு சந்திப்பு!

'பளிச்'சிவப்பு... நேகா ஷெட்டி!

SIR மூலம் பாஜக தனது சொந்த கல்லறையை தோண்டுகிறது! - மமதா பானர்ஜி | செய்திகள்: சில வரிகளில் | 3.12.25

திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT