அனிதா ராதாகிருஷ்ணன் 
தமிழ்நாடு

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கு 23-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஆக.23 ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை ஒத்தி வைத்தது.

DIN

தமிழக அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை ஆக.23 ஆம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை ஒத்தி வைத்தது.

கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சிக் காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தாா். அப்போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சோ்த்ததாக கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.

இந்த வழக்கில் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரா்கள் உள்பட 7 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி அமலாக்கத்துறையினா் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இதன் மீதான விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் புதன்கிழமை நடைபெற இருந்தது. இதனிடையே, இந்த வழக்கை விசாரித்து வரும் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விடுப்பில் உள்ளதால், விசாரணையை ஆக.23 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) சுவாமிநாதன் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் விவசாய பண்ணை தொழிலாளி மரணம்

ஆட்டோ ஓட்டுநருக்கு கத்திக்குத்து

நடிகை மனோரமா மகன் பூபதி காலமானாா்

காஞ்சிபுரத்தில் 51 ஏரிகள் நிரம்பின: விவசாயிகள் மகிழ்ச்சி

விமானம், மெட்ரோ, ரயில், சாலை போக்குவரத்தை ஏரோசிட்டி ஒருங்கிணைக்கும்

SCROLL FOR NEXT