சென்னை: சென்னை பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு இன்று காலை மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், நங்கநல்லூர் பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பழவந்தாங்கல் காவல் நிலையத்துக்கு சென்ற முதல்வர், கோப்புகளை ஆய்வு செய்த பின்னர், புகார் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து காவலர்களிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.