சுத்தமல்லி அருகே விவசாயி வெட்டிக் கொலை!
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லியை சேர்ந்தவர் கொம்பையா (55). விவசாயி. இவர் சுத்தமல்லி பகுதியில் வியாழக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார்.
பக்கத்து வீட்டுக்காரரான கருத்தப்பாண்டி என்பவரின் நாய் தன் மகளை கடித்ததைத் தொடர்ந்து கொம்பையா சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கருத்தப்பாண்டி மற்றும் இருவர் சேர்ந்து கொம்பையாவை வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.