பேராம்பூர் வீரபத்திரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழாவில் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து ஆசீர்வாதம் ஆசீர்வாதம் வழங்கிய கோயில் பூசாரி. 
தமிழ்நாடு

கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் 

விராலிமலை அருகே கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபட்டனர். 

DIN

விராலிமலை: விராலிமலை அருகே கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபட்டனர். 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள பேராம்பூர் வீரபத்திரர் கோயிலில் ஆடிப்பெருக்கு விழா நள்ளிரவு விடிய விடிய நடைபெற்றது. 

இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி வழிபாடு நடத்தினர். 

இதில் விசேஷ வழிபாடாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து வழிபட்டு சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதையொட்டி, இந்த கோயிலுக்கு தேனி மாவட்ட பகுதியில் இருந்து வந்திருந்த பக்தர்கள் வரிசையாக சன்னதி முன்னால் தரையில் அமர வைக்கப்பட்டனர். தொடர்ந்து கோயில் பூசாரி, பக்தர்களின் ஒவ்வொருவர் தலையிலும் தேங்காயை உடைத்து ஆசீர்வாதம் வழங்கினார். 

பல்வேறு விதமான வழிபாடுகளில் தலையில் தேங்காய் உடைத்து வழிபாடு நடத்துவது வினோத வழிபாடாக பார்க்கப்படுகிறது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சட்டவிரோத வங்கதேச குடியேறிகளின் வாக்குகளைக் காப்பதே ராகுலின் நோக்கம்: அமித் ஷா

திமுக சாா்பில் செப்.20,21-இல் பொதுக் கூட்டங்கள்

நேபாளத்தில் அமைதியை மீட்டெடுக்க ஆதரவு: பிரதமா் மோடி உறுதி

ஆந்திர மதுபான ஊழல்: தமிழகம் உள்பட 20 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

அங்கன்வாடி ஊழியா்களை ஏமாற்றியது திமுக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT