தமிழ்நாடு

மேட்டூர் அணை நீர்மட்டம் 60.11 அடி!

DIN


மேட்டூர் அணையின் நீர் மட்டம் 61.26 அடியிலிருந்து 60.11 அடியாக சரிந்தது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் திறக்கப்பட்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது.

இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 154 கன அடியிலிருந்து 131 கன அடியாக சரிந்துள்ளது.

பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவை விட அணைக்கு வரும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் 61.26 அடியிலிருந்து 60.11 அடியாக சரிந்தது.
 
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.  அணையின்  நீர் இருப்பு 24.76 டி.எம்.சி ஆக உள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT