தமிழ்நாடு

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவு

DIN

வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் பொன்னையன் சுற்றறிக்கையில், ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி ஆக.15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் இடத்தை முன்கூட்டியே ஊரக பொதுமக்களுக்கு தெரியப்படுத்திட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் குடியரசு தினம், உழைப்பாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். 
அதன்படி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓய்வு பெற்ற துணைவேந்தர் வீட்டில் 100 பவுன் நகை திருட்டு

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

ஹரியாணா, தில்லி பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு!

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

SCROLL FOR NEXT