போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 
தமிழ்நாடு

போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி: 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெருமாநல்லூர் காவல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

DIN

அவிநாசி: போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி பெருமாநல்லூர் காவல் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி காவல் உள்கோட்டம் பெருமாநல்லூர் போக்குவரத்து, காவல்துறை சார்பில் பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது. 

போதைப்​ பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

பெருமாநல்லூர் காவல் நிலையம் அருகே உள்ள உத்தமலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, திருப்பூர் சாலை, ஈரோடு சாலை, அவிநாசி சாலை வழியாக கொண்டத்து காளியம்மன் கோயிலில் நிறைவடைந்தது. 

இந்த நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் வசந்தகுமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் தினகரன், காவல் உதவி ஆய்வாளர்கள் அன்பரசு, உமா மகேஸ்வரி, பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பெருமாநல்லூர், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, கேஎம்சி பப்ளிக் பள்ளி, சக்தி விக்னேஸ்வரா,  விக்னேஸ்வரா, தி இந்தியன் பப்ளிக் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

SCROLL FOR NEXT