தமிழ்நாடு

சுதந்திர நாள்: பாதுகாப்புப் பணியில் 40 ஆயிரம் காவலர்கள்!

சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

76வது சுதந்திர நாளையொட்டி சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து முனையங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக எண்ணிக்கையிலான காவலர்கள் பாதுகப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகளிலும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். 

இதேபோன்று சென்னையிலுள்ள முக்கிய சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் காவலர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

இதற்காக சென்னையில் மட்டும் 9 ஆயிரம் காவலர்களும், தமிழ்நாடு முழுவதும் 40 ஆயிரம் காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT