மீண்டும் 44 ஆயிரத்தைத் தொட்ட ஒரு சவரன் தங்கம்!
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வதும், குறைவதும் அவ்வப்போது நிகழ்ந்து வரும் ஒன்றாக இருந்தாலும், கடந்த ஏப்ரலில் இருந்தே தொடர்ந்து ஏற்றத்துடன் இருந்து வருகிறது.
அதன்படி,சென்னையில் ஆகஸ்ட் 15-(செவ்வாய்க்கிழமை) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,000-க்கும், ஒரு கிராம் ரூ.5,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேசமயம், வெள்ளி விலை அதே விலையில் நீடிக்கிறது. அதன்படி ஒரு கிராம் ரூ.76.00-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.76,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.