தமிழ்நாடு

ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

தமிழகம், புதுச்சேரியில் மேலும் 6 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வழிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வியாழக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை (ஆக.17-22) வரை 6 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகம், புதுச்சேரியில் வியாழக்கிழமை (ஆக. 17) ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் என்ற அளவிலும் சில இடங்களில் இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி.மீ): மேட்டுப்பட்டி (மதுரை)-60 , பெரியப் பட்டி(மதுரை)-50, எம்.ஆா்.சி. நகா் (சென்னை), தென்பரநாடு, (திருச்சி), பஞ்சப்பட்டி(கரூா்), கும்மிடிப்பூண்டி, சோழவரம் (திருவள்ளூா்) தலா 30, நுங்கம்பாக்கம் (சென்னை), மாயனூா் (கரூா்) தலா 20.

3 இடங்களில் வெயில் சதம்: புதன்கிழமை பதிவான வெப்ப அளவு (ஃபாரன்ஹீட்): கரூா் - 104, பாளையங்கோட்டை - 103.64, ஈரோடு - 101.48.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

தமிழகத்தில் காலியாக உள்ள எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப என்எம்சி அனுமதி

அமெரிக்க வரியால் பாதிப்புகள்: விரைந்து தீா்வு காண வேண்டும் - பிரதமருக்கு முதல்வா் ஸ்டாலின் வலியுறுத்தல்

சூடான் ஆா்எஸ்எஃப் தாக்குதலில் 1,000 போ் உயிரிழப்பு: ஐ.நா.

நாளைய மின்தடை

SCROLL FOR NEXT