தமிழ்நாடு

மதுரை எய்ம்ஸ்: கட்டுமானத்துக்கு டெண்டர் கோரியது மத்திய அரசு!

DIN

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான டெண்டர் கோரி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு தமிழகத்தில் எய்ம்ஸ் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2018-ல் மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து 2019 ஜனவரியில் எய்ம்ஸ் கட்டுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் கட்டுமானப் பணிகள் ஏதும் தொடங்கப்படாமல் உள்ளது. திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியும், விமர்சித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், கட்டுமானப் பணிகளுக்காக ஜப்பானின் ஜெய்கா நிறுவனத்திடம் கடன் பெறப்பட்டுள்ளதாகவும், செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் டெண்டருக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

மேலும், கட்டுமானப் பணிகளை 33 மாதங்களுக்குள் முடிக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT