தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றதால் ஆசிரியர் கண்மூடித்தனமாக மாணவ,மாணவிகளை பிரம்பால் அடித்ததால்  ஏற்பட்டுள்ள ரத்த காயம். 
தமிழ்நாடு

தேர்வில் மதிப்பெண் குறைவு... மாணவ-மாணவியர்களை பிரம்பால் அடித்ததால் ரத்த காயம்

இடைத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற 22 மாணவ-மாணவியர்களை பிரம்பால் அடித்து ரத்த காயம் ஏற்படுத்திய வேதியியல் ஆசிரியர்

DIN


மணப்பாறை: மணப்பாறை அருகே தனியார் மெட்ரிக் பள்ளியில் நடந்து முடிந்த இடைத்தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்ற 22 மாணவ-மாணவியர்களை பிரம்பால் அடித்து ரத்த காயம் ஏற்படுத்திய வேதியியல் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த திருமலையான்பட்டியில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த சில நாள்களுக்கு முன் இடைத்தேர்வு நடைபெற்றுள்ளது. தேர்வில் அறிவியல் - கணிணியுடன் கூடிய பிரிவு +1 மாணவ-மாணவியர்கள் 27 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 50 மதிப்பெண்ணிற்கான தேர்வில் ஒரு மாணவியை தவிர, வகுப்பில் இருந்த 26 பேரும் குறைந்த அளவிலான மதிப்பெண்ணே எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேதியியல் ஆசிரியர் அனைவருக்கும் கேள்வித்தாளை வீட்டு பாடமாக பயின்று வர கூறினாராம். ஆனால் அதற்கும் பெரும்பாலான மாணவ-மாணவியர்கள் படித்து வரவில்லையாம். வெள்ளிக்கிழமை காலை வகுப்பிற்கு வந்த ஆசிரியர், அங்கிருந்த 22 மாணவ- மாணவியர்களை பிரம்பு கொண்டு தொடை, முதுகு, கை, கால் பகுதிகளில் அடித்துள்ளார். இதில் மாணவர்கள், மாணவியர்களின் உடலில் ரத்த காயம் ஏற்படும் அளவிற்கு கொடுங்காயம் ஏற்பட்டுள்ளது. 

மாலையில் வீடு திரும்பிய மாணவ-மாணவியர்கள் நடந்தவற்றை பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதில் புத்தாநத்தம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த மாணவர்கள் பைசூல்ரஹுமான், முகமது தாரீக் ஆகியோர் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிகப்பட்டது. இதில் மாணவியர்கள் சிலர் அவர்களுக்கு அந்தரங்க இடங்களில் ஏற்பட்டுள்ள காயங்களை பெற்றோர்களிடம் காண்பிக்கக் கூட தயக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. 

மாணவர்களின் கல்வியில் அக்கறைக்காட்டும் ஆசிரியர்கள் கண்டிப்பது நல்லது தான், இருப்பினும் இவ்வாறு கண்மூடித்தனமாக காவல்நிலையத்தில் குற்றவாளியை தாக்கியது போன்ற காயங்கள் ஏற்படும் வகையில் தாக்கி இருப்பது வருந்ததக்கது. ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT