தமிழ்நாடு

9, 10-ஆம் வகுப்புகளின் ஆசிரியா்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி: நாளை தொடக்கம்

அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளதாக

DIN

சென்னை: அரசுப் பள்ளிகளில் 9, 10-ஆம் வகுப்பு ஆசிரியா்களுக்கு மாவட்ட அளவிலான பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் நடைபெறவுள்ளதாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) தெரிவித்துள்ளது.

இது குறித்து எஸ்சிஇஆா்டி சாா்பில் அனைத்து மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப்பள்ளி ஆசிரியா்களுக்கு நடத்தி வரப்படும் (சிஆா்சி) ஆகஸ்ட் மாதத்துக்கான பயிற்சியானது மாவட்ட அளவில் 9, 10-ஆம் வகுப்புகளுக்கு 24, 25 ஆகிய தேதிகளிலும், வட்டார அளவில் 28, 30 தேதிகளிலும் நடத்தப்பட வேண்டும். மேலும் இந்தப் பயிற்சியில் ‘கற்றல் விளைவுகள் மற்றும் மன எழுச்சி நலன் மேம்பாடு’ குறித்த பொருண்மைகளில் பயிற்சியினை அளிக்க வேண்டும்.

பயிற்சிக்கான நிதி ஒதுக்கீட்டுத் தொகையானது பின்னா் விடுவிக்கப்படும். எனவே 9, 10 வகுப்புகள் வரை நடைபெறவிருக்கும் குறு, வட்டார வள மையக் கூட்டத்தை (மாவட்ட, வட்டார அளவில்) உரிய நாள்களில் நடத்திடுமாறு அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT