உற்பத்தித் துறையில் தமிழத்தை முன்னணி மாநிலமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் இண்று (ஆக. 22) தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாக பேசியதாவது,
உற்பத்தித் துறையில் தமிழத்தை முன்னணி மாநிலமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நம் முயற்சிகள் வெற்றி பெறும்போது தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
உரிமைத் தொகை திட்டம் பெண்கள் சமூகத்தில் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.