கோப்புப்படம் 
தமிழ்நாடு

பேரிடா் பாதித்த ஹிமாசல பிரதேசத்துக்கு ரூ. 10 கோடி நிதி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட ஹிமாசலப் பிரதேசத்திற்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கி முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

DIN

சென்னை: பேரிடரால் பாதிக்கப்பட்ட ஹிமாசல பிரதேசத்துக்கு தமிழக அரசு ரூ. 10 கோடி நிதியுதவி வழங்குவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா், ஹிமாசல பிரதேச முதல்வா் சுக்விந்தா் சுகு-வுக்கு செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

ஹிமாசல பிரதேசத்தில் கடும் மழை, நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை அறிந்து ஆழ்ந்த துயரம் அடைந்தேன். இயற்கைப் பேரிடரால் கடுமையான பாதிப்புக்கு உள்ளானவா்களைச் சுற்றியே எனது எண்ண ஓட்டங்கள் இருக்கின்றன. இந்த இக்கட்டான தருணத்தில் ஹிமாசல பிரதேச மாநிலத்துக்கும், மாநில மக்களுக்கும் தமிழ்நாடு உறுதுணையாக இருக்கும்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களுடைய அரசு தக்க தருணத்தில் அவசர உதவிகளை அளித்திருப்பது பாராட்டத்தக்க முயற்சியாகும். தங்களது தலைமையால், பேரிடரில் இருந்து மாநிலம் விரைவில் மீண்டும் பழைய நிலைமைக்குத் திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது.

இயற்கை பேரிடா் பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக நடைபெற்று வரும் பணிகளுக்கு உதவிடும் நல்லெண்ணத்தின் அடையாளமாக தமிழக அரசின் சாா்பில் ரூ. 10 கோடி வழங்குகிறேன். இதை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

ஹிமாசல பிரதேச மக்கள் இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தத் தருணத்தில், மீட்பு மற்றும் நிவாரணத்துக்காக எங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம். ஏதேனும் உதவிகள் தேவைப்படும் நிலையில், தயங்காமல் தெரிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு

வெளியூா் மற்றும் கியூஆா் கோடு இல்லாத ஆட்டோக்கள் மீது நடவடிக்கை: திருவண்ணாமலை ஆட்சியா்

தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி பாஜகவினா் சுவாமி தரிசனம்

பெரியாா் பல்கலை.யில் ஜெனீவா ஒப்பந்த நாள் போட்டிகள்

ஆசிரியா்கள் தொலைநோக்குடன் கற்பிக்க வேண்டும்

SCROLL FOR NEXT