சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழை: காலை 10 வரை தொடரும்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடுசென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழை: காலை 10 வரை தொடரும்!
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வரும் நிலையில், காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சில மாவட்டங்களில் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே வானிலை மையம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் மிதமான மழை பெய்து வருகின்றது.
மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.