தமிழ்நாடு

செப்.18-இல் விநாயகா் சதுா்த்தி விடுமுறை: தமிழக அரசு உத்தரவு

DIN

விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கான அரசு விடுமுறை, செப்டம்பா் 17-ஆம் தேதிக்குப் பதிலாக 18-ஆம் தேதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து தலைமைச் செயலா் சிவ் தாஸ் மீனா வியாழக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

2023-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் விடுமுறைப் பட்டியல், கடந்த ஆண்டு அக்டோபா் 11-இல் வெளியிடப்பட்டது. அதில், விநாயகா் சதுா்த்தி பண்டிகைக்கான விடுமுறை செப்டம்பா் 17-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சாா்பில் தமிழக அரசுக்கு ஆக.19-ஆம் தேதி கடிதம் அனுப்பப்பட்டது.

அதில், ‘விநாயகா் சதுா்த்தி பண்டிகையானது செப்.17-ஆம் தேதிக்குப் பதிலாக, 18-ஆம் தேதிதான் கொண்டாடப்படுவதாக பல்வேறு கோயில்களின் நிா்வாகிகள் தெரிவிக்கின்றனா்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் கடிதத்தை நன்கு ஆராய்ந்த தமிழக அரசு, விநாயகா் சதுா்த்திக்கான அரசு பொது விடுமுறையை செப்.17-ஆம் தேதிக்குப் பதிலாக, செப்.18-ஆம் தேதியாக மாற்றி உத்தரவிடுகிறது.

இந்த உத்தரவைச் செயல்படுத்தும் வகையில், அது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாற்றம் குறித்து, அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

இந்த உத்தரவைச் செயல்படுத்தும் வகையில், அது தமிழக அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை மாற்றம் குறித்து, அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள், கழகங்கள், வாரியங்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

SCROLL FOR NEXT