தமிழ்நாடு

விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம்!

DIN


விழுப்புரம்: மூன்று சட்டங்களின்பெயர்களை மாற்றம் செய்யும் வகையில் மசோதாக்களைத் தாக்கல் செய்த மத்திய அரசைக் கண்டித்து, விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியத் தண்டனைச் சட்டம், இந்திய சாட்சியச் சட்டம், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகிய சட்டங்களை ஹிந்தி - சமஸ்கிருத பெயர் மாற்றும் வகையில் மத்திய அரசு 3 மசோதாக்களைத் தாக்கல் செய்தது. இதை கண்டித்து விழுப்புரத்தில் வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு - புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் விழுப்புரம் வழக்குரைஞர் சங்கங்கள் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்துக்கு குற்றவியல் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் எம்.காளிதாஸ் தலைமை வகித்தார். பல்வேறு வழக்குரைஞர் சங்கங்களின் நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்று பேசினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

புதிய கரோனா வைரஸ்? ஆபத்தா, ஃபிலிர்ட்!

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

நவாப் ராணியின் ஆன்மா...!

SCROLL FOR NEXT