தமிழ்நாடு

சிதம்பரம் கோயிலில் கட்டுமானம்: உயா்நீதிமன்றம் கேள்வி

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது என பொது தீட்சிதா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

DIN

சிதம்பரம் நடராஜா் கோயிலுக்குள் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது என பொது தீட்சிதா்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சிதம்பரம் நடராஜா் கோயிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியிலும், கோயிலின் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களிலும் எந்த அனுமதியும் இன்றி கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், கோயிலுக்குள் இருந்த நூறு ஆண்டுகள் பழைமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, பழைமையான கோயில்களில்

எந்த அனுமதியும் பெறாமல் கட்டுமானங்களை மேற்கொள்ளக் கூடாது என உயா்நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளபோதும், அதை மீறி ஆறு அடிக்கு மேல் தோண்டப்பட்டுள்ளது.

எந்த மாதிரியான பணிகள் நடைபெறுகின்றன என்பதே தெரியவில்லை என்பதால் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் என அறநிலையத் துறை ஆணையா் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து, கோயிலுக்குள் எப்படி கட்டுமானங்கள் மேற்கொள்ள முடியும், எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தேவைப்பட்டால் மாவட்ட நீதிபதியை நியமித்து அறிக்கை கோரப்படும் என தெரிவித்த நீதிபதிகள், எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப் படாது என்று உத்தரவாதம் அளிக்கிறீா்களா அல்லது தடை விதிக்கவா என்று நீதிபதிகள் எச்சரித்தனா்.

இதையடுத்து எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளப்படாது என்று தீட்சிதா்கள் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து அறநிலையத் துறை ஆணையா் மனுவுக்கு பதிலளிக்கும்படி பொது தீட்சிதா்கள் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை டிச. 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT