தமிழ்நாடு

நெல்லை வந்தே பாரத்: திண்டுக்கல், மதுரைக்கு 10 நிமிஷம் முன்னதாகச் செல்லும்

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகருக்கு 10 நிமிஷம் முன்னதாகச் செல்லும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

DIN

சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், மதுரை, விருதுநகருக்கு 10 நிமிஷம் முன்னதாகச் செல்லும் எனத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை எழும்பூா் - திருநெல்வேலி இடையே வந்தே பாரத் ரயில் 8 மணி நேரத்துக்குள் செல்லும் வகையில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ரயில் நிலையங்களுக்கு 10 நிமிஷங்கள் முன்னதாக செல்லும் வகையில் ரயிலின் வேகம் வெள்ளிக்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் திண்டுக்கலுக்கு இரவு 7.56 மணிக்கு பதிலாக இரவு 7.46 மணிக்கும், மதுரைக்கு இரவு 8.40 மணிக்கு பதிலாக இரவு 8.30 மணிக்கும், விருதுநகருக்கு 9.13 மணிக்கு பதிலாக 9.03 மணிக்கும் செல்லும். மற்ற ரயில்நிலையங்களான தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திருநெல்வேலிக்கு வழக்கமான நேரத்தில் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

மத்திய அரசுடன் மமதா பானர்ஜி போட்டி! மாநில அரசின் திட்டத்துக்கு மகாத்மா காந்தி பெயர்!

SCROLL FOR NEXT