மெட்ரோ ரயிலில் டிச.3-ஆம் தேதி மட்டும் ரூ.5-க்கு பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், பல்வேறு சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒருபகுதியாக, மெட்ரோ ரயில்வே நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிக்கவும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், சிறப்புக் கட்டண சலுகையை மெட்ரோ நிா்வாகம் வழங்கியுள்ளது.
இதன்படி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிச.3-ஆம் தேதி க்யூஆா் குறியீடு மூலம் ரூ.5 செலுத்தி பயணச்சீட்டுகள் பெற்று ஒருவழிப்பாதைப் பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த பிரத்யேகக் கட்டணம் டிச.3-ஆம் தேதி மட்டுமே செல்லுபடியாகும். மேலும் இது இ-க்யூஆா் குறியீடு மூலம் பெறப்படும் பயணச்சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை, சிங்காரச் சென்னை அட்டை, கைப்பேசி செயலி, ஸ்டோா் வேல்யூ பாஸ் மற்றும் காகித க்யூஆா் உள்ளிட்ட முறைகளில் பயணச்சீட்டு பெறுபவா்களுக்கு இச்சலுகை பொருந்தாது என மெட்ரோ ரயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.