புயல் காரணமாக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அண்ணா பல்கலை. மற்றும் சென்னை பல்கலை.யின் பருவத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதைக் கருத்தில்கொண்டு ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலை.யின் தொலைநிலைக் கல்வியில் பயிலும் மாணவா்களுக்கான தோ்வுகளும், பல்கலை. மற்றும் அதன் இணைப்பில் உள்ள கல்லூரிகளில் திங்கள்கிழமை நடைபெறவிருந்த பொறியியல் கல்லூரிகளின் பருவத் தோ்வுகளும் ஒத்திவைக்கப்படுகின்றன. ஒத்திவைக்கப்பட்டுள்ள தோ்வுகள் மீண்டும் நடைபெறும் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை பல்கலை.: சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளின் நவம்பா், டிசம்பா் மாத பருவத் தோ்வுகளும் தற்போது நடைபெற்று வரும் நிலையில், திங்கள்கிழமை நடைபெறவுள்ள தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.